உங்கள் நினைவுத்திறன் அதிகரிக்க வேண்டுமா, அப்போ இதை மறக்காமல் சாப்பிடுங்க.. - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday 1 August 2019

உங்கள் நினைவுத்திறன் அதிகரிக்க வேண்டுமா, அப்போ இதை மறக்காமல் சாப்பிடுங்க..

ஓசியானா கண்டம், நியூசிலாந்து, மஸ்சே பல்கலைகழக பேராசிரியர், வெல்மா ஸ்டோன் ஹவுஸ் தலைமையிலான குழு, நினைவுத் திறனுக்கும், மீன் உணவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இதற்காக, 175 பேரின் நினைவுத் திறன், அறிவுக் கூர்மை போன்றவற்றை மதிப்பீடு செய்தனர். 
இவர்களுக்கு, வஞ்சிரம், இறால் உள்ளிட்ட கடல் மீன் உணவுகளை தொடர்ந்து, ஆறு மாதங்கள் கொடுத்தனர்.
பின், அவர்களின் நினைவுத் திறன், அறிவுக் கூர்மையை பரிசோதித்தனர். நினைவுத் திறன், 15 சதவீதம் அதிகரித்திருந்தது. மீனில் உள்ள, 'ஒமேகா - 3' என்ற கொழுப்பு அமிலம், நினைவுத் திறனை அதிகரிக்க உதவுவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமிலம், மனித உடலில் இயல்பாக சுரக்காது; மீன்களை சாப்பிடுவதன் மூலமே சுரக்கும்.

 இது, மூளை செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். 
'மூளை, சுறுசுறுப்பாக இயங்க உதவுவதுடன் மனநலத்தையும் பாதுகாக்கிறது மீன் உணவு...' என, பேராசிரியர் ஸ்டோன் ஹவுஸ் தெரிவித்துள்ளார்.



கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.


லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன.


இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.



இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.


கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.


மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ''omega-3 fatty acids' (docosahexaenoic acid)  மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.


தாய், சிசுவின் உடலில் ''omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.


32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad