நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Wednesday 24 April 2019

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்:

நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள்
நெஞ்செரிச்சல்: இதனை கூறுபவர் அநேகர். வயிறு, நெஞ்சு, தொண்டை இவற்றில் சங்கடமான உணர்வு இருக்கும். வயிற்றுப் பிரட்டல், வாந்தி கூட இருக்கும். இது பொதுவான அறிகுறிகள். ஆனால் சில சமயங்களில் வேறு சில அறிகுறிகள் கூட இருக்கலாம். அவை


அடிக்கடி சிலர் தொண்டையில் சற்று கனைத்துக்கொண்டே இருப்பர். சிலர் எச்சிலை வெளியில் துப்புவர். வயிற்றில் ஏற்படும் ஆசிட் தொண்டையில் கிசுகிசுப்பு உணர்வினை ஏற்படுத்தும். இது நெஞ்செரிச்சலின் அமைதி வெளிப்பாடு.
* இருமல் ஏற்பட்டால் அது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் நெஞ்செரிச்சலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

* விழுங்குவதில் சிரமம் இருந்தாலும் அது உடனடியாக  கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

* தொண்டைவலி தொடர்ந்து இருந்தால் வயிற்றில் ஆசிட் அதிகம் சுரக்கின்றதா என கவனிக்க வேண்டும்.

* வாயில் அதிக எச்சில் சுரப்பது ஆசிட் தொந்தரவு காரணமாக இருக்கலாம்.

* புளித்த, கசப்பு உணர்வுகள் வாயில் ஏற்பட்டால் ஆசிட் தொந்தரவு காரணமாக இருக்கலாம்.

பொதுவான காரணங்கள்:

* இரவு படுக்கப்போகும் முன் உண்ணக்கூடாது.

* அதிக பால் சார்ந்த உணவு கூடாது.

* ஒரே நேரத்தில் அதிக அளவு உண்ணக் கூடாது.

* புகை பிடித்தல்

* அதிக மது

* இவை நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் ஆகும்.

No comments:

Post a Comment

Post Top Ad