How-do-you-know-the-health-of-the-tongue: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday, 16 November 2017

How-do-you-know-the-health-of-the-tongue:



நாக்கின் நிறத்தை வைத்து உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?நாக்கின் நிறத்தை வைத்து உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?


உடலில் எலும்புகள் இல்லாத உறுப்புகளில் நாக்கும் ஒன்று. உணவை உண்பது, உணவை மெல்வது, உணவை விழுங்குவது, பானங்களை அருந்துவது போன்ற முக்கியமான உணவுச் செரிமான இயக்கத்துக்கு உதவுவது நாக்கின் முக்கியப் பணிகள்.

நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நாக்குதான். அதற்கு உதவும் வகையில் நாக்கில் ‘சுவையுணர்வு ஏற்பிகள்’ ஏராளமாக உள்ளன. இவை இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படைச் சுவைகளை நமக்கு உணர்த்துகின்றன. நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறினால் பாக்டீரியா, வைரஸ், ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ எனும் பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் நாக்கைப் பாதிக்கும். அப்போது நாக்கில் புண்கள் வரும்.

இரும்புச்சத்து, வைட்டமின் சத்து உட்பட்ட பல ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளவர்களுக்கு நாக்கில் அடிக்கடி புண்கள் வரும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துள்ளவர்களுக்கும், வெற்றிலை பாக்கு, பான் மசாலா, புகையிலை போடுபவர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோருக்கும் நாக்கில் புண் வரும் வாய்ப்பு அதிகம்.

ஸ்டீராய்டு, ‘ஆன்டிபயாடிக்’ போன்ற சில மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போதும், சில மருந்துகளின் ஒவ்வாமை காரணமாகவும் நாக்கில் புண் ஏற்படுவதுண்டு. தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு உண்டாகிற மன அழுத்தம், தூக்க மின்மைகூட நாக்கில் புண் உண்டாக வழி அமைக்கும். பற்களில் ‘கிளிப்’ போட்டிருப்ப வர்களுக்கும் செயற்கைப் பல்செட் சரியாகப் பொருந்தாதவர்களுக்கும் நாக்கில் புண் ஏற் படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இப்போது குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருகிற து. கட்டுப்படுத்தத் தவறினால் நாக்கில் புண் வரும்.



* வெற்றிலைப் போடாமலேயே சிலருக்கு நாக்கு மிக அதிகமாக சிவந்து காணப்படும். இது வைட்ட மின் பி12 மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பதற்கான அறிகுறியாகும். பெரும்பாலும் சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு நாக்கு இப்படி மிக சிவப்பாக இருக்கும். மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கேற்ப உணவுகள் எடுத்துக் கொள்வது அவசியம்.

* கரு நாக்கு (கருமை அல்லது ப்ரௌன்நிற படிவம் நாக்கில் படர்ந்திருக்கும்) உடையவர்கள் சரியாக அவர்களது வாய் மற்றும் பற்களை பராமரிப்பது இல்லை என்று அர்த்தமாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். நீங்கள் சாப்பிடும் உணவின் ருசி மாறுபட்டு உணர்வீர்கள். அதிகமாக புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கு இவ்வாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

* நாக்கில் வெள்ளை நிறத்தில் சீஸ் போன்று படிவம் படர்ந்திருந்தால் வாயில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இந்த வாய் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக் குறைகிறது என்பதற்கான அறிகுறி. இதனால் ஆன்டி-பயாட்டிக் உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டிய`து அவசியம்.



* வயது அதிகமானாலோ அல்லது பூஞ்சைத் தொற்று ( Fungal) ஏற்பட்டாலோ இவ்வாறு நாக்கில் சுருக்கம் அல்லது வெட்டு ஏற்பட்டது போல இருக்கும். ஆன்டி-ஃபங்கள் (Anti-Fungal) மருந்துகள் எடுத்துக் கொள்வது தான் இந்த பிரச்சனைக்கானத் தீர்வு.

* நாக்கில் சிவப்பாக சிதைக் காயம் ஒரு சில வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருப்பதுபோல இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சிகச்சை மேற்கொள்ளுங்கள். இது நாக்குப் புற்றுநோயாக இருக்க வாய்ப்பிருக்கிறது. காரமான உணவுகள் சாப்பிட்டால் ஓரிரு வாரம் இது போன்ற சிவந்த சிதைக்காயம் ஏற்படுவது சகஜம் தான்.

* உங்கள் நாக்கு எரிச்சலுக்கு நீங்கள் உபயோகப்படுத்தும் பற்பசைக் (Tooth Paste) கூடக் காரணமாக இருக்கலாம். மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் நெருங்கும்போது இது போன்ற நாக்கு எரிச்சல் ஏற்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad