Foods and Drinks That Can Cause Tooth Decay in Children | What to: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday, 16 November 2017

Foods and Drinks That Can Cause Tooth Decay in Children | What to:

குழந்தைகளின் பற்களை சொத்தையாக்கும் குளிர்பானங்கள்
குழந்தைகளின் பற்களை சொத்தையாக்கும் குளிர்பானங்கள்
ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்கள் தான் குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன. இன்றைய குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்பி குடிக்கின்றனர். இப்படி குளிர்பானங்களை அதிகம் குடித்தால், அதில் உள்ள சர்க்கரை குழந்தையின் பற்களைப் பாதிப்பதோடு, அவர்களின் உடல் எடையை அதிகரித்துவிடும்.

இந்நிலை நீடித்தால், சிறுவயதிலேயே குழந்தைக்கு நீரிழிவு, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி, எந்த ஒரு உணவை உட்கொண்ட பின்னரும் நீரால் வாயைக் கொப்பளிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். இங்கு குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை ஏற்படும் உணவுகள் மற்றும் பானங்களை பார்க்கலாம்.

உங்கள் குழந்தைக்கு ஜூஸ் செய்து கொடுக்கும் போது, அதில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்த்து, தேன் சேர்த்து கொடுங்கள். ஏனெனில் சர்க்கரை பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். முக்கியமாக பற்களைத் தாக்கி சொத்தையாக்கி, ஈறுகளையும் சேர்த்து பாதித்து, ஈறு நோய்களை உண்டாக்கிவிடும்.



சாதம், வெள்ளை பிரட், பாஸ்தா போன்றவை ஈறு நோய்களையும், சொத்தைப் பற்களையும் ஏற்படுத்தும். எப்படியெனில் இவற்றை உட்கொள்ளும் போது, அவை எளிதில் வெளிவராதவாறு பற்களில் சிக்கிக் கொண்டு, பல் சொத்தை மற்றும் ஈறு நோய்கள் ஏற்படுத்தும். எனவே எப்போதும் குழந்தைகளுக்கு வெள்ளை நிற உணவுப் பொருட்களை அதிகம் கொடுத்து பழக்காதீர்கள்.

சோடா பானங்களில் உள்ள அமிலம், குழந்தைகளின் பற்களைப் பாதித்து, பற்களின் எனாமலை அரித்து, சொத்தைப் பற்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் சோடா பானங்கள் உடல் பருமனை ஏற்படுத்தும். எனவே முடிந்த வரையில் குழந்தைகளுக்கு இந்த பானங்கள் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

சாக்லேட்டுகள் முழுமையாக சர்க்கரையைக் கொண்டவை. இவ்வளவு சர்க்கரை நிறைந்த சாக்லேட்டுக்களை குழந்தைகளுக்கு அதிகம் சாப்பிடக் கொடுத்தால், வாயில் உள்ள பாக்டீரியா அந்த சர்க்கரையை உட்கொண்டு, பற்களை அரிக்க ஆரம்பித்து, சொத்தைப் பற்களை வேகமாக உண்டாக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad