How-to-find-quality-meat-goat-chicken-fish: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday, 13 July 2017

How-to-find-quality-meat-goat-chicken-fish:

தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி?
நாம் உண்ணும் இறைச்சி உடலுக்குப் பாதுகாப்பானதா... அவை தரமானதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழக்கூடிய ஒன்று. இறைச்சி வாங்கும்போது நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
இறைச்சியைப் பொறுத்தவரை, மக்களுக்கு அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லை என்பதே உண்மை. முதலில் இறைச்சி எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.வெட்டப்படாத முழு இறைச்சியைச் சாதாரண வெப்பநிலையில் 2 மணி நேரம் வரை வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. குளிரூட்டப்பட்ட இடத்தில் (0 - 5 டிகிரி) இருந்தால் ஒருநாள் வைத்திருக்கலாம். அதனை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தவில்லையெனில், மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் (-18 முதல் -20 டிகிரி) பாதுகாக்க வேண்டும்.

அதிலிருந்து வெளியே எடுத்தவுடனேயே சமைக்கக் கூடாது. மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட இடத்தில் சில மணி நேரம் பாதுகாக்கப்பட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஓடும் நீரில் நன்றாகக் கழுவிவிட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருப்பதால் பலர் அதனை வெந்நீரில் சுத்தம் செய்கின்றனர். அது மிகவும் தவறு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருந்தால், அது பழைய இறைச்சி என்று நினைக்கிறார்கள். ஆனால், அதுவே பாதுகாக்கப்பட்ட இறைச்சி.



நல்ல கோழி இறைச்சியை எப்படி அறிவது?

இறைச்சியை நசுக்கிப் பார்த்தால் அதிலிருந்து தண்ணீர்வரக் கூடாது. காரணம், நிறைய இடங்களில் எடைக்காகத்  தண்ணீரை சேர்க்கிறார்கள். இறைச்சி சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.

நன்றாக அழுத்திப் பார்த்தால், உள்ளே அமுங்கி சிக்கன் உடையக் கூடாது. மேற்புறங்களில் பச்சை நிறப் படிவங்கள் இருக்கக் கூடாது.

ஆட்டு இறைச்சி கண்டறிவது எப்படி?

இறைச்சி பழையதாக இருந்தால் அழுத்தித் தொடும்போது உடையும். சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.

பழுப்பு நிறத்தில் இருந்தால் அது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர வேண்டும். இறைச்சியில் அதிக வழுவழுப்புத் தன்மை இருந்தாலும் அது பாதுகாப்பானது அல்ல. 
மீன் உணவு எவ்வாறு கணிப்பது?
மீன் கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தால், எதிரே பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பாதுகாப்பான மீன். செவுள்களில் சிவந்த நிறம் இருக்க வேன்டும். நீல நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருந்தால், அது உணவுக்கு ஏற்ற மீன் உணவு அல்ல.

வயிற்றுப் பகுதியிலோ துடுப்புப் பகுதியிலோ காயங்கள் இருந்தால், அதனைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எப்போதும் குளிரூட்டப்பட்ட இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.

இறால்மீன் உணவு எப்படிக் கண்டறிவது ?

இறாலில் குடற்பகுதி அகற்றி இருக்க வேண்டும். தலைப் பகுதியில் மஞ்சள் நிற பொட்டுக்கள் இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

வழுவழுப்புத் தன்மை இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment

Post Top Ad