Caring for Parents Compared to Caring for Children: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday 13 July 2017

Caring for Parents Compared to Caring for Children:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எங்கேயும் எப்போதும் கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். பார்த்துப் பார்த்து உணவூட்டுவார்கள். சிறு உடல்நல பாதிப்பு என்றாலும் துடித்துப் போய் ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள்.
இப்படிப்பட்ட பெற்றோரை பிற பெற்றோரும் வியப்பாய் பார்ப்பார்கள். ‘பெத்தவங்கன்னா இப்படித்தான் இருக்கணும்’ என்பார்கள்.ஆனால், குழந்தைகளை கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக்கொள்ளும் ‘அதீத அக்கறை’ பெற்றோரால் அக்குழந்தைகளுக்கு அபாயம்தான் அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குழந்தை எங்கே கீழே விழுந்து காயம்பட்டுக்கொள்ளுமோ என்று மேற்கண்ட பெற்றோர் கருதி விளையாடாமல் தடுப்பதால், அவர்களின் எடை கூடும் அபாயம் அதிகரிக்கிறதாம்.

இதுதொடர்பான ஆய்வை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். அவர்கள், பூங்காவுக்கு வரும் குடும்பங்களைக் கவனித்தனர். அப்போது, அதீத அக்கறை பெற்றோர் தங்கள் குழந்தைகள் அதிகம் ஓடியாடாமல், விளையாட்டு அமைப்புகளில் ஏறி விளையாடாமல் பார்த்துக் கொண்டனர். குழந்தைகள் இயல்பாக விளையாடுவதைத் தடுத்த இவர்கள், அவர்களை பெஞ்சுகளில் உட்கார வைப்பதில் கவனமாக இருந்தனர். இத்தகைய பெற்றோர்களை ‘ஹெலிகாப்டர் பெற்றோர்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்மூர் பாஷையில் ‘பொத்திப்பொத்தி’ வளர்க்கும் பெற்றோர் எனலாம்.



“இன்று பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிக கவலை கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவேதான் அவர்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தைகள் தங்கள் சம வயது நண்பர்கள், அண்டை அயலாருடன் விளையாடும் வாய்ப்பு குறைகிறது. தொலைக்காட்சி அல்லது கணினி முன்னிலையிலேயே உட்கார்ந்திருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது” என்கிறார், ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ஜேசன் பொக்காரோ.

இவர்கள் அமெரிக்காவில் 20 பூங்காக்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். அங்கு வந்த குழந்தைகளை, விளையாடாமல் ‘தேமே’ என்று உட்கார்ந்திருப்பவை, ஓரளவு ஓடியாடுபவை, ரொம்பத் தீவிரமாக விளையாடுபவை என்று பிரித்தார்கள்.

தங்கள் ஆய்வின் அடிப்படையில், பொதுப் பூங்கா அமைப்பை வடிவமைக்கலாம், அதன் மூலம் பெற்றோரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் குழந்தைகளை நெருங்க முடியாமல், அமர்ந்து கண்காணிக்கும் வகையில் செய்யலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad