More-benefits-of-red-guava | Kalvikural.com - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday, 2 February 2017

More-benefits-of-red-guava | Kalvikural.com

அதிக நன்மைகள் நிறைந்த சிவப்பு நிற கொய்யா
கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளது. அவை தான் சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுள்ள கொய்யா பழங்கள். சிவப்பு நிற கொய்யாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது.  
கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளது. அவை தான் சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுள்ள கொய்யா பழங்கள்.இந்த இரண்டு வகை நிறமுள்ள கொய்யா பழமானது, நிறத்தில் மட்டுமல்ல, அதனுடைய மருத்துவ நன்மைகளிலும் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யா பழத்தில், கேரட் மற்றும் தக்காளி பழத்தில் இருக்கும் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
சிவப்பு கொய்யா பழமானது, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான ஓரு பழமாகும். எனவே அவர்கள் இந்த கொய்யாவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது.

சிவப்பு நிறமுள்ள கொய்யா பழத்தில் விட்டமின் C அதிகமாக உள்ளதால், இது நமது உடம்பில் இருக்கும் பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் பாதுகாக்கிறது.
நமது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விட்டமின் A சத்துக்கள் சிவப்பு கொய்யா பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே இந்தப் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண்பார்வை பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
சிவப்பு கொய்யாவில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, நமது வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியைக் குறைத்து, நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இந்த சிவப்பு நிறமுள்ள கொய்யா பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே அந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad