How-to-make-Ragi-dhokla. - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday, 2 February 2017

How-to-make-Ragi-dhokla.

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா  தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - முக்கால் கப்,
ரவை - கால் கப்,
கடலை மாவு - கால் கப்,
புளித்த தயிர் - அரை கப்,
ஃப்ரூட் சால்ட்(Fruit Salt) - ஒரு தேக்கரண்டி,
உப்பு - ருசிக்கேற்ப,
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி,
கடுகு, உளுந்து - தலா கால் தேக்கரண்டி,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி.

செய்முறை :


* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கடலை மாவு, வறுத்த ரவை, தேவையான உப்பு, புளித்த தயிர், ஃப்ரூட் சால்ட், ஆப்ப சோடா போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். இட்லி மாவுப் பதத்துக்கு மாவு இருக்க வேண்டும்.

* ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் துண்டுகளாக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து வேகவைத்த கேழ்வரகு துண்டுகள் மேல் ஊற்றி, தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.

* சூப்பரான சத்தான கேழ்வரகு டோக்ளா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

 

No comments:

Post a Comment

Post Top Ad