Powerful Ways to Boost Your Confidence | Kalvikural.com - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Tuesday, 27 September 2016

Powerful Ways to Boost Your Confidence | Kalvikural.com

தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்..!


Successfulநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை . இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை. மாறாக, அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . 
ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது. ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும். அதற்கு செய்ய வேண்டியன என்ன?*நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை,” என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்” என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.
* பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும்.

No comments:

Post a Comment

Post Top Ad