நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
மாம்பழம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒரு உன்னதமான பழம்.ஆனால்
யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம்
பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம்
சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால்
முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா!
இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு
மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம்,
பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.
மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை
மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் சத்தும், பங்கனப்பள்ளி
மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் சத்தும் உள்ளதாக
ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான
நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத்
தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள
நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும்,
மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல
ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம்
சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய்
ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில்
சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி
வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள்
கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள
கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில்
மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல்
இருக்கும்.
அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா
அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா…? பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம்
போதுமா! தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து,
நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில்
தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்….
மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும்
நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள்
கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும்
ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஹையா ஜாலி! ஆய்வுகளே சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து
வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின்
ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.
100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி 70 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட் 17.00 கிராம்
சர்க்கரை 14.08 கிராம்
நார்ச்சத்து 1.08 கிராம்
கொழுப்பு 0.27 கிராம்
புரதம் 0.51 கிராம்
வைட்டமின் ஏ 38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன் 445 மைக்ரோ கிராம்
தையாமின்
(வைட்டமின் பி) 0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின்
(வைட்டமின் பி2) 0.057 மில்லி கிராம்
நியாசின்
(வைட்டமின் பி3) 0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக்
அமிலம் (பி5) 0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6 0.134 மில்லி கிராம்
போலேட்
(வைட்டமின் பி9) 14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி 27.7 மில்லி கிராம்
கால்சியம் 10 மில்லி கிராம்
இரும்புச் சத்து 0.13 மில்லி கிராம்
மக்னீசியம் 9 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 11 மில்லி கிராம்
பொட்டாசியம் 156 மில்லி கிராம்
துத்தநாகம் 0.04 மில்லி கிராம்
சர்க்கரை 14.08 கிராம்
நார்ச்சத்து 1.08 கிராம்
கொழுப்பு 0.27 கிராம்
புரதம் 0.51 கிராம்
வைட்டமின் ஏ 38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன் 445 மைக்ரோ கிராம்
தையாமின்
(வைட்டமின் பி) 0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின்
(வைட்டமின் பி2) 0.057 மில்லி கிராம்
நியாசின்
(வைட்டமின் பி3) 0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக்
அமிலம் (பி5) 0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6 0.134 மில்லி கிராம்
போலேட்
(வைட்டமின் பி9) 14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி 27.7 மில்லி கிராம்
கால்சியம் 10 மில்லி கிராம்
இரும்புச் சத்து 0.13 மில்லி கிராம்
மக்னீசியம் 9 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 11 மில்லி கிராம்
பொட்டாசியம் 156 மில்லி கிராம்
துத்தநாகம் 0.04 மில்லி கிராம்
No comments:
Post a Comment