
பெண்களுக்கு வருகிற மார்பகப்
புற்றுநோயைப் போல ஆண்களுக்கான மார்பக புற்றுநோய் அவ்வளவு எளிதாக யாருக்கும்
வருவதில்லை. அது மிகவும் அரிதான ஒன்றுதான் என்றாலும், பெண்களுக்கு எவ்வளவு
பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான் ஆண்களுக்கும்
உண்டாகும்.
புற்றுநோயைப் பொறுத்தவரையில் விளைவுகளில் எந்தவிதமான மாற்றமும் வேறுபாடும்
கிடையாது. அதனால், மார்பகப் புற்றுநோய் வந்ததைவிட அதை சரிசெய்ய முயற்சி
செய்வதைவிட, வரும்முன் காப்பதற்கு முயற்சி செய்வது நல்லது என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள்.
அறிகுறிகள்
மார்பகப்
புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான். ஆனால்
ஆண்கள் மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்று
நினைத்துக் கொண்டு, அது காட்டும் சில அறிகுறிகளை கண்டுகொள்ளாமல்
அஜாக்கிரதையாகக் கடந்துவிடுகிறார்கள். கீழ்கண்ட அறிகுறிகள் ஏதாவது
தென்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை செய்வது நல்லது.

மார்பகங்களில் சின்ன சின்னதாக கட்டி வருவது
மார்புக் காம்புகளின் வடிவத்தில் மாற்றங்கள் உண்டாதல்
மார்புக் காம்பிலிருந்து நீர் வடிதல்
மார்புக் காம்புகளில் வலி
மார்பகம் சிவந்து போதல், தோல் உரிதல் (அ) மார்பில் ஏதேனும் மாற்றங்கள் உண்டாதல்
எந்த நோயாக இருந்தாலும் அதற்கு நாம் எடுத்துக் கொள்கின்ற மருந்து, சிகிச்சை
என ஒருபுறம் இருந்தாலும், அந்த சமயங்களில் நாம் எடுத்துக் கொள்கின்ற
உணவுமுறை தான் நோய் குணமடையவும் அதிகமாகவும் காரணமாக அமைகிறது. அதேபோல் தான
மார்பகப் புற்றுநோயும். நாம் எடுத்துக் கொள்ளும் டயட் முறை மிகமிக
முக்கியம்.
No comments:
Post a Comment