குண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும் : - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Saturday 13 October 2018

குண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும் :

குண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும்
குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தோள்பட்டையைவிட அகலமான இடுப்பை பெற்றிருப்பார்கள். கீழ்வயிறு, இடுப்பு, தொடைப் பகுதியில் கொழுப்பு சேரும். அவர்கள் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளையும், உணவுகட்டுப்பாட்டையும் கடைபிடித்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கொழுப்பை எரித்து செலவிடும் வகையில் உடல் இயக்க செயல்பாட்டை மாற்ற கடும் உடற்பயிற்சி தேவை. எல்லாம் கலந்த உடற்பயிற்சி முறை ஏற்றது. தனுராசனம், நவ்காசனம், புஜங்காசனம் ஆகியவை ஏற்றது. பயிற்சி முடிக்கும் போது சர்வாசனம், பிராணாயாமம் செய்யலாம். பெரிய உடல்வாகு கொண்ட பெண்கள் காயமடையும் வாய்ப்பு கொண்டவர்களாக இருப்பதால் இந்த பயிற்சியை முறைவான வழிக்காட்டுதலின் கீழ் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

கார்டியோ: மற்ற உடல்வாகு கொண்டவர்களை விட எடை குறைப்புக்கு அதிக கார்டியோ செய்ய வேண்டும். சுறுசுறுப்பான நடை, தோள் பட்டை, கைகள், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை உள்ளிட்ட பகுதிகளை வலுவாக்கும் வகையில் சில நிமிட ஸ்டிரெச்சிங் மற்றும் வலுவாக்கும் பயிற்சியை கார்டியோ உள்ளடக்கியிருக்க வேண்டும். ஸ்பாட் ஜாகிங், கழுத்து சுழற்சி, தோள்பட்டை பயிற்சி, பாதங்களை தொடுவது, பக்கவாட்டில் குனிவது ஆகியவை காயமடைதல், சுளுக்கு பாதிப்பை குறைத்து மூட்டு, தசைகளின் இயக்கத்தை சீராக்கும். வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு முறை 45 நிமிட தீவிர ஏரோபிக் பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.

குண்டான உடல் வாகு கொண்டவர்கள் பருமனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் ஊட்டச்சத்தை அதிகமாக்கி, கொழுப்பைக் குறைக்க வேண்டும். அதிக கலோரி உணவும் சர்க்கரையும் கொண்ட கொழுப்பை உண்டாக்கும் உணவுப்பொருட்களை தவிர்க்கவும். இந்த வகையினர் எடை குறைப்பது கடினமானது என்பதால் சரியான உணவு என்பது 30 சதவித கலவையான மாவுச்சத்து, 45 சதவீத நல்ல புரதம், 25 சதவீத ஆரோக்கியமான கொழுப்பு கொண்டிருக்க வேண்டும்.

எல்லா வகையான சர்க்கரைப் பொருட்களையும் (வாழைப் பழம், மாம்பழம், திராட்சையில் இருப்பவை சேர்த்து) வெள்ளை மாவு பொருட்கள், அரிசி, பாஸ்தா, உருளை ஆகியவற்றை தவிர்க்கவும். இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால், இன்சுலின், கொழுப்பை சேமிக்கும் ஹார்மோன் அதிகம் சுரக்கும். உங்கள் உடல் இயக்க அளவை அதிகமாக வைத்திருக்க உணவு அளவை சிறு பகுதிகளாக்கி உட்கொள்ளவும். பசியோடு இல்லாமல் ஒவ்வொரு 2-&-3 மணி நேரத்திற்கும் ஏதாவது சாப்பிடவும். 

No comments:

Post a Comment

Post Top Ad