
தினம் தோறும் நாக்கை சரியாக சுத்தம்
செய்யவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளைப்பற்றி பார்க்கலாம்.
தினமும் பல் தேய்த்த பின் நாக்கை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், வாய்
துர்நாற்ற்ம் அதிகமாகும். பாக்டீரியாக்கள் அதிகமாக பரவத்துவங்கி, பின்
மோசமான வாடையை உண்டுபண்ணும்.
நாக்கை சரியாக சுத்தம் செய்யாததால், சில நேரங்களில் ஈறுகளில் ஏற்படும்
நோய்கள் வர காரணமாகும். இதனால் ஈறுகள் அதிக சிகப்பாக காணப்படுவது, ரத்தம்
கசிவது உள்ளிட்ட பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.
நாக்கை சுத்தம் செய்யவில்லை என்றால், அது ஈறுகளின் பிரச்சனைக்கு வழி
வகுக்கும், இதனால் பற்கள் பலவீனமவதோடு, சில நேரங்களில் பற்களை எடுக்கும்
நிலை கூட ஏற்படும்.
நாக்கை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் நாக்கில் உள்ள சுவையரும்புகள்
மந்தமாவதுடன், சில நாட்களில் சுத்தமாகவே சாப்பிடும் உணவின் சுவை தெரியாமலே
போகும் நிலை உருவாகும்.
நாக்கை நீங்கள் சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் உங்கள் நாக்கு கருப்பாக
மாறும். இதனால் ஆபத்து எதுவும் இல்லை என்றாலும் நாக்கு கருமையான
நிறத்திற்கு மாறிவிடும்.
No comments:
Post a Comment