சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

வெயில் காலத்தில் பச்சை உணவுகளை சாப்பிடலாம் என கூறப்படுகிறது. காய்கறி,
பழங்கள் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மற்றும் இரவு
உணவு, குளிர் காலத்தில் பச்சை உணவுகளை தவிர்த்தல் நல்லது.
உடலில் உள்ள நச்சுக்களை போக்க, ஆப்பிள், பப்பாளி, பெர்ரி, அன்னாசி,
பேரிக்காய், துளசி போன்ற உணவுகளை பச்சையாக அல்லது ஜூஸாக அப்படியே
சாப்பிடலாம். மேலும் இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, வெந்தையம், சீரகம் போன்ற
உணவுப் பொருட்களை காய்கறி சூப் போன்று சமைத்து உட்கொண்டாலும் உடலிலுள்ள
நச்சுக்களை போக்க முடியும்.
உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அப்படியே தங்க வைக்க, குறைவான
சூட்டில் வேக வைப்பது தான் சிறந்த முறையாகும். இவ்வாறு சமைப்பதால் உணவில்
ஊட்டச்சத்து தங்குவது மட்டுமின்றி, செரிமானமும் சீரிய முறையில் இயங்க
வழிவகுக்கும்.
மைக்ரோவேவில் மீண்டும் சூடு செய்வதால், அதிலிருந்து வெளிப்படும் சூடு,
உணவில் இருக்கும் மூலக்கூறுகளை சிதைத்துவிடுகிறது. இது உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் செயல் என்பதால் மைக்ரோவேவ் ஓவனை தவிர்ப்பது நல்லது.
மஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து உணவை சமைப்பது சிறந்த முறை ஆகும். இவை
உடலுக்கு வலிமையும், நலனும் அதிகரிக்க வைக்கின்றன. மேலும் மிகுதியாய்
வேகாமல் அல்லது கருகிவிடாமல் சமைக்க வேண்டும்.
ஃப்ர்ட்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று சமைத்த
உணவை இன்றே சாப்பிட்டு விடுவது தான் சிறந்த முறை. எனவே, ஃப்ரிட்ஜில்
வைத்து நாட்கள் கடத்தி உணவை உண்ணும் பழக்கத்தை கைவிடுங்கள். இது செரிமான
பிரச்சனைகள் உண்டாக முக்கிய காரணமாகும்.
No comments:
Post a Comment