எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ் - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Sunday, 25 February 2018

எடையை குறைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ்

201802241041302363_Aloe-vera-ginger-juice_SECVPF
தேவையான பொருட்கள் :  

கற்றாழை ஜெல் - 100 கிராம்
எலுமிச்சை - 1
தேன் - தேவையான அளவு
இஞ்சி - 1/2 இன்ச்
உப்பு - 1 சிட்டிகை 

201802241041302363_1_Aloeveragingerjuice._L_styvpf

செய்முறை :  

எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

கற்றாழையை தோல் நீக்கி உள்ளே இருக்கும் ஜெல் போன்ற சதை பகுதியை எடுத்து 3 அல்லது 4 முறை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு இந்த சாறை மிக்சியில் போட்டு அதனுடன் நறுக்கிய கற்றாழையை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைக்கவும்.

இந்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும்.

சூப்பரான இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad