புற்றுநோயை அனுபவித்துக்
கடப்பவர்கள் எத்தனை சிரமத்துக்குள்ளாவார்கள்? அதிலும் குழந்தைகளுக்குப்
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால்?! நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது இல்லையா?
அத்தனை வலி நிரம்பிய ஒரு நோய்க்கும், கடினமான சிகிச்சைக்கும் ஒரு குழந்தை
தள்ளப்படுவது வேதனையல்லவா?
* கண்ணில் வெள்ளை நிற திட்டுகள் உருவாவது, பார்வைக்குறைபாடு, இமை வீக்கம் போன்றவை ஏற்படலாம்.
* வயிறு மற்றும் இடுப்புப் பகுதி, மூட்டு, உள்ளுறுப்புகளில் கட்டிவருவது.
* அதீதக் காய்ச்சல், உடல் எடை குறைவது/அதிகரிப்பது என திடீரென உடலில் ஏற்படும் சில மாற்றங்கள்.
* எலும்பு, மூட்டு, தசைப்பகுதிகளில் தாங்க முடியாத வலி.
* நரம்பு தொடர்பான பிரச்னைகள்.
* தொடர் வாந்தி, அடிக்கடி தலைவலி ஏற்படுவது.
* நடப்பதில் சிரமம் ஏற்படுவது.
குழந்தைகளுக்குப்
புற்றுநோய் ஏற்படுவதற்கு 'இதுதான் காரணம்' என வகைப்படுத்த முடியாது
என்பதால், பெரியவர்கள் சந்திக்கும் புற்றுநோய்க்கு நடத்தப்படும்
விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளைப்போல இதற்கான நிகழ்ச்சிகள் எங்கும்
நடப்பதில்லை. குழந்தைக்கு ஏற்படும் புற்றுநோயை நம்மால் தடுக்க முடியாது
என்றாலும், முறையான மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சையின் மூலம் முழுமையாக
குணப்படுத்திவிடலாம்.
No comments:
Post a Comment