ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட அதிக ஆசை இருக்கின்றதா?
சில சமயங்களில் நாம் சாக்லேட்,
சிப்ஸ், பீட்சா போன்ற வகையறுக்களை சாப்பிட ஆசைபடுவது இயற்கை. ஆனால் இது
போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை எப்பவுமே சாப்பிட நினைக்கும் அநேகர் உண்டு.
பொதுவில் இம்மாதிரி குறிப்பிட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட
நினைப்பவர்களுக்கு சில தாது உப்புகள் குறைபாடு இருக்க அதிக வாய்ப்பு உண்டு.
*
அடிக்கடி சாக்லேட் சாப்பிட நினைப்பவர்களுக்கு மக்னீசியம் குறைபாடு இருக்க
அதிக வாய்ப்பு உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. இந்த மக்னீசியம் 300 வகை
இரசாயன மாற்ற செயல்பாடுகளுக்கு அவசியம் ஆகின்றது.
*
சர்க்கரை அல்லது இனிப்பு உண்பதில் சிலருக்கு கட்டுப்பாடே இருக்காது. இதனை
கட்டுப்பாட்டில் கொண்டு வர மிகவும் சிரமப்படுவர். பொதுவில் க்ரோமியம்
சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்கின்றது. பாஸ்பரஸ் உடலுக்கு சக்தி
தருகின்றது. சிலப்பர் நச்சினை நீக்குகின்றது. டிரிப்டோபேன் செரடோனின்
அளவினை சீர்படுத்துகின்றது.
இனிப்பு அதிகம்
உட்கொள்வது பல குறைபாடுகளை ஏற்படுத்தும். எனவே விகிதாசார உணவு, காய்கறி,
முழு தானியம் என்ற அளவில் உண்பது தாது உப்புகளை சீராய் வைக்கும்.
மைதா போன்ற கார்போஹைடிரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருங்கள் என்று சொல்வதன் காரணம் அதில் நைட்ரஜன் குறைபாடு ஏற்படுகின்றது.
முழு தானிய உணவுகள், முட்டை, பருப்பு இவை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.
No comments:
Post a Comment