இன்றைய பெண்களில்
பெரும்பாலானவர்களுக்கு விட்டமின் - பி குறைவாக உள்ளது. இதனால் ரத்த சோகை
ஏற்படுவதோடு, மகப்பேறு பிரச்சனைகளும் உருவாகின்றன. கரு உண்டாவதில்
பிரச்சனை, கரு தங்கலில் பிரச்சனை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய
குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களை பெண்கள் பலர் எதிர்கொள்கிறார்கள்.
இதையெல்லாம் தவிர்க்கவே, மருத்துவர்கள் விட்டமின் - பி9 நிறைந்த ஃபோலிக்
ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள்.
கர்ப்பகாலத்தில்
பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், கருவின்
வளர்ச்சிக்காகவும், தாயின் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவும்,
குழந்தையின் `டிஎன்ஏ’ வளர்ச்சிக்கும் ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக்
கொள்வது அவசியமானது.
‘உடனடியாகக் குழந்தை
பெற்றுக்கொள்ளும் முடிவிலிருக்கும் பெண் எனில், திருமண நாளில் இருந்தே
ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிடத் தொடங்கலாம். மருத்துவ ஆலோசனையுடன்
திருமணத்துக்கு 3 மாதங்கள் முன்பிருந்தேகூட எடுத்துக்கொள்ளலாம்.
கர்ப்பிணிகள்
விட்டமின் - பி9 நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அது அவர்களின்
உடலுக்குப் போதாது என்பதால், அதனுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்
எடுத்துக்கொள்வதும் அவசியம்.
No comments:
Post a Comment