How To Get Rid of Blackheads On The Nose Fast : - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Wednesday, 23 August 2017

How To Get Rid of Blackheads On The Nose Fast :

மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்:
மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்
பட்டை மற்றும் தேன் மூக்கில் உள்ள கரும்புள்ளியை போக்க மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.



கிரீன் டீ கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

1 டேபிள் ஸ்பூன் உப்பை சிறிதளவு தண்ணீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad