How To Get Dark & Long Lasting Mehendi - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Tuesday, 4 July 2017

How To Get Dark & Long Lasting Mehendi

பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள். அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது. சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.
* மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.


* எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.


* மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.
* கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சை சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்

* கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 1-2 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad