வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் ப்ரூஃப் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டு தயாராகும் ஐபோன் 8
சான்பிரான்சிஸ்கோ:
உலகில்
அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 8 சிறப்பம்சங்கள், வடிவமைப்பு,
விலை என பல்வேறு தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. அந்த
வரிசையில் ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வரும் நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரி புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களை உறுதி
செய்துள்ளார்.
பெகட்ரன் மற்றும் ஃபாக்ஸ்கான்
போன்று ஐபோன்களை தயாரிக்கும் நிறுவனமான விஸ்ட்ரன் நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரி ராபர்ட் வாங் புதிய ஐபோனில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வாட்டர்
ப்ரூஃப் வசதி வழங்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
விஸ்ட்ரன்
நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் நடைபெற்ற வருடாந்திர விவாதத்திற்கு பின்
செய்தியாளர்களிடம் கூறும் போது, 'முந்தைய ஐபோன்களுக்கும் புதிய
சாதனத்திலும் தயாரிப்பு பணிகளில் அதிகளவு மாற்றங்கள் இல்லை என்றாலும்,
வாட்டர் ப்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்'.
என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே வெளியான பல்வேறு
தகவல்களில் புதிய ஐபோனில் வாட்டர் ப்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்சமயம்
வழங்கப்பட்டு வரும் Qi வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துமா
அல்லது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துமா என்பது குறித்து எவ்வித
தகவலும் இல்லை.
இதோடு
சமீபத்திய ஆப்பிள் காப்புரிமைகளில் ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ்
சார்ஜிங் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் வெளியாகின. இவை ஐபோன்களை வை-பை
ரவுட்டர் போன்று சார்ஜ் செய்யும் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக
வெளியான தகவல்களில் புதிய ஐபோனில் 3D சென்சிங் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி
வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இன்பராரெட்
டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் மாட்யூல் தொழில்நுட்பங்களின் மூலம்
வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வசதி
வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
புதிய
ஐபோனில் சாம்சங் OLED வகை டிஸ்ப்ளேக்களுக்கு மாற்றாக ஆப்பிள் தனது புதிய
சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பொறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
No comments:
Post a Comment