நோக்கியா 3, 5, 6 இந்திய விலை இவ்வளவு தானா?
எச்எம்டி
குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3, 5, 6 ஸ்மார்ட்போன்களின் விற்பனை சில
தினங்களில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவற்றின் விலை
இணையத்தில் கசிந்து வருகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய நோக்கியா
ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை நிர்ணயம்
செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
பி.எஸ்.யு
தளத்தின் தகவல்களின் படி நோக்கியா 3, 5, 6 விலை முறையே ரூ.9,990, ரூ.12,990
மற்றும் ரூ.15,990 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துடன் ஜூன் 13-ந்தேதியே புதிய ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள்
ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் முன்பதிவு செய்யலாம் என்றும்,
விநியோகம் ஜூன் 20-ந்தேதி துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய
நோக்கியா ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஒ அப்டேட் வழங்கப்படும் என்றும்,
ஒவ்வொரு மாதமும் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என
எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர்
தெரிவித்திருந்தார்.
இத்துடன்
ஜூன் 13-ந்தேதி நடைபெறும் நோக்கியா விழாவில் நோக்கியா 9 ஃபிளாக்ஷிப்
ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா 9
சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.27 இன்ச் 1440x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட
டிஸ்ப்ளே, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான
தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என
கூறப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சமீபத்தில்
வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம்,
குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா, யுஎஸ்பி
டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment