How-can-I-avoid-acne-during-summer: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2017

How-can-I-avoid-acne-during-summer:



வெயில் காலத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்பது?

முகப்பரு மரபணு பிரச்சனை, ஹார்மோன்கள் பிரச்சனை போன்ற பல காரணங்களால் உண்டாகின்றன. எதிர்பாராத சில வேளைகளில் முகப்பருக்கள் சருமத்தில் தழும்புகளாக மாறிவிடுகின்றன. அதனை எளிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலமாகவே சரிசெய்துவிட முடியும்.

மேக்கப்பை முகத்தில் அதிக நேரம் வைத்திருக்காமல் சுத்தம் செய்வது நல்லது. அது சருமத்தில் எண்ணெய்ப்பசையை அதிகரிக்கும். அவை பாக்டீரியாக்களுக்கு உணவாகிவிடும். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் உண்டாகிவிடும். ஆல்கஹால் கலக்காத ரிமூவர்கள் கொண்டு மேக்கப்பை துடைத்துவிடுங்கள்.

மேக்கப்பை துடைத்தபின் எப்பொழுதும் போல முகத்தை நல்ல ஸ்கிரப் கொண்டு சுத்தம் செய்யவும். ஸ்கிரப் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கும் தன்மையுடையது. அடுத்ததாக, பேஸ்பேக் பயன்படுத்தலாம். பேஸ்பேக் போடும் போது, சருமத்துளைகள் திறந்திருக்கும். அதைத்தொடர்ந்து, முகத்துக்கு ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருக்களும் ஓடிப்போகும்.



எஸ்பிஎப் 30 திறன் கொண்ட சன்ஸ்கிரீன் லோஷன்களைப் பயன்படுத்துவதன் மூலம் சூரியக் கதிர்வீச்சிலிருந்து காத்துக் கொள்ள முடியும். அதேசமயம் முகப்பருக்கள் வராமலும் தடுக்க முடியும்.

ஜஸ்கிரீம், கூல் ட்ரிங்ஸ் போன்ற உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். பாஸ்ட்புட் உணவுகளுக்குப் பதிலாக பச்சை காய்கறிகள், பழங்கள், ஜூஸ், தயிர், எலுமிச்சை, முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உடலில் நீர்த்தன்மை அதிக அளவு இருப்பது அவசியம். 10 முதல் 12 கிளாஸ்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அவை உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது அவசியம். யோகா மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க முடியும். மூச்சுப்பயிற்சி மற்றும் யோகாசனப் பயிற்சிகளை செய்வதால் உடலின் ரத்த ஓட்டம் சீராவதோடு முகப்பருக்களும் வராமல் தடுக்கும்.

புதினா, எலுமிச்சை, தேன், வேப்பிலை, மஞ்சள், தயிர் போன்ற வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை முகத்துர்க்குப் பயன்படுத்துங்கள். அவை பக்க விளைவுகளற் ஏதுமில்லாமல் உங்கள் முகப்பரு பிரச்சனையை சரிசெய்யும்.

No comments:

Post a Comment

Post Top Ad