Home Remedies for Yellow Teeth : - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Monday, 12 June 2017

Home Remedies for Yellow Teeth :

பற்களின் மஞ்சள் கறையை இயற்கை முறையில் நீக்கலாம்:
பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், பார்க்க அசிங்கமாக இருக்கும். பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க, சில எளிய ஆரோக்கியமான இயற்கை வழிகள் உள்ளன.
பற்களின் மஞ்சள் கறையை இயற்கை முறையில் நீக்கலாம் ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது சுத்தம் கேள்விக் குறியாகி விடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகை பிடிப்பது ஆகியவற்றை காரணமாக கூறலாம்.

இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாகக் காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பற்களை அடிக்கடி பிளச்சிங் செய்து வெண்மையாக்கி கொள்கிறார்கள். இப்படி செய்வதால், பற்கள் வெண்மையாகும். ஆனால், பற்களின் ஆரோக்கியம் கெட்டுவிடும். பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்க, சில எளிய ஆரோக்கியமான இயற்கை வழிகள் உள்ளன.

பற்களை எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறை படிப்படியாக நீங்கும். எலுமிச்சை பழத்தைக் கொண்டு பற்களை துலக்கி, பின் குளிர்ந்த நீரில் பற்களை கழுவினால், கறைகள் நீங்கி பிரகாசமாக தெரியும்.



தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், அதில் உள்ள அசிட்டிக் அமிலம் பற்களில் உள்ள, கறைகளையும் நீக்குகிறது. கடைகளில் கிடைக்கும் சாதாரண உப்பைக் கொண்டு, பற்களை துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் அகன்று, பற்கள் பிரகாசமாக இருக்கும்.

உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஈறுகளையும், எனாமலையும் பாதிக்கும். சாதாரண சாம்பலை, பேஸ்ட்டுடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்குவதால், பற்களில் உள்ள கறை நீங்கி, வெண்மையாக காட்சியளிக்கும். இரவு உறங்கும் முன், ஆரஞ்சு தோலில் பற்களை துலக்கி விட்டு, வாயை கழுவாமல் படுத்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து, பற்களில் உள்ள கறைகளை நீக்கி விடும்.

No comments:

Post a Comment

Post Top Ad