Does Chocolate Give You Pimples? - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Saturday, 17 June 2017

Does Chocolate Give You Pimples?

பருக்களுக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடும். இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக் கொண்டே இருக்கும்.

இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக் கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒயிட் சாக்லெட், டார்க் சாக்லெட், மில் சாக்லெட் எனச் சாக்லெட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லெட்களும் கொழுப்புச் சுரங்கம் தான்.



100 கிராம் சாக்லெட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு (Saturated fat) வகையைச் சேர்ந்தது, கொழுப்பு அமிலம் மிகுந்தது.

சாக்லெட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகம். 100 கிராம் சாக்லெட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆக, எண்ணெய்ச் சுரப்பிகளுக்கு நல்ல ‘தீனி’ கிடைத்து விடும். இதனால் அவை சீக்கிரத்தில் மூடிக் கொள்ளும்.

இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்கும்; புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லெட்டைத் தவிர்ப்பதே நல்லது.

No comments:

Post a Comment

Post Top Ad