Diabetic Soup Recipes : Diabetic Indian Soup Recipes: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Friday, 2 June 2017

Diabetic Soup Recipes : Diabetic Indian Soup Recipes:

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் சூப்பரான சூப்!!!
நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரையைக் கொழுப்பாகவும், கிளைகோ ஜென்னாகவும் சேமித்து வைத்து, நமது உடம்பிற்கு தேவையான இன்சுலின்களை சுரக்கும் பணியை கணையம் செய்கிறது.
கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது, நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் நேரடியாக கலந்து விடுகிறது.
இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது, இவர்களுக்கான அருமையான பானம் தான் வேப்பம் பூ சூப்.
தேவையான பொருட்கள்
 வேப்பம் பூ – 4 டீஸ்பூன்
வெண்ணெய் – 4 டீஸ்பூன்
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் – 1 கப்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் வாணலியில் வெண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், அதில் வேப்பம்பூவைப் போட்டு வறுக்க வேண்டும்.
பின் வேப்பம் பூ நன்கு வறுபட்டதும், அதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில், இந்த சூப்பை வடிகட்டி, அதனுடன் காய்கறிகள், தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து வயதினரும் இந்த வேப்பம்பூ சூப்பைக் வாரம் ஒருமுறை குடித்து வந்தால், நல்ல பயன்கள் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad