தங்கநகை வாங்குவோர் கவனத்திற்கு
நமது வாழ்கையில் தவிர்க்க முடியாத ஒன்று தங்கம் என்ற உலோகம். அரசன் ஆனாலும்
சரி ஆண்டி ஆனாலும் சரி, கடுகளவாவது தங்கம் இல்லாமல் வாழ்வதில்லை. இந்த
அளவு மதிப்பு வாய்ந்த உலோகத்தை வாங்கும் பொழுது இன்று வரை யாரும்
முழுமனதுடன் வாங்குவதில்லை. காரணம் தம்மை ஏமாற்றியிருப்பார்களோ என்ற
உணர்வு.
உண்மை …
சாமானியர்கள் இன்றுவரை ஏமாற்றப்பட்டுள்ளாகள், அல்லது ஏமாந்துள்ளார்கள், தங்கத்தின் எடையில் அல்ல தரத்தில். இதை தவிர்க்க வழியே இல்லையா. இந்த தொழில் செய்வோர் அனைவரும் இப்படிதானா. கண்டிப்பாக இல்லை.
நகை தொழிலும் பல நல்ல வியாபாரிகள் உள்ளனர். என்ன ஒன்று நல்லவர்கள்
விளம்பரப்படுத்தப்படுவதில்லை. ஆகையால் இங்கே சில கோட்டான்கள் குதித்து
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், ஏமாந்தவர்களின் இதயத்தில் ஏறி.இதற்கான ஒரு சிறு விழிப்புணர்வு முயற்சியே தொடர்ந்து வரும் கட்டுரை. இந்த
இடத்தில் இந்த கட்டுரையை எழுதிய நண்பர் திரு.தமிழ் அமுதன் பற்றி
குறுப்பிட்டே ஆக வேண்டும்.இவர் தங்க பட்டறை நடத்தி வருகிறார். தனது
தொழிலின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக இந்த கட்டுரையை எனது
வேண்டுகோளுக்கிணங்க, நமது வலைத்தளத்தில் இடுவதற்காக அனுப்பியுள்ளார். அவரது
வேலைகளுக்கு இடையில் சிரமம் பாராமல் அவர் செய்த இந்த உதவிக்கு நான் நன்றி
சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.உண்மை …
சாமானியர்கள் இன்றுவரை ஏமாற்றப்பட்டுள்ளாகள், அல்லது ஏமாந்துள்ளார்கள், தங்கத்தின் எடையில் அல்ல தரத்தில். இதை தவிர்க்க வழியே இல்லையா. இந்த தொழில் செய்வோர் அனைவரும் இப்படிதானா. கண்டிப்பாக இல்லை.
இனி தங்கம் என்ற உலோகத்தின் உலகத்திற்கு செல்வோம்…
91.6 …… ஒரு விளக்கம்
91.6 என்பது ஒரு கிராம் ஆபரண தங்கத்தில் 91.6% சுத்தமான 24 கேரட் தங்கம் . மீதி 8.4 சதவீதம் செம்பு ,மற்றும் வெள்ளி ஆகும். 91.6 தங்கம்தான் 22 கேரட் தங்கம் .
KDM என்றால் என்ன ?
முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று ஒரு கலவையை பயன் படுத்துவார்கள் . (தங்கம் + வெள்ளி +செம்பு ) இந்த மூன்றும் சேர்ந்ததுதான் பொடி . இந்த பொடியை பயன்படுத்தி நகை பற்றவைக்கும் போது பொடியில் உள்ள செம்பு , மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன் சேர்ந்து விடும் அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும் . ஆனால் KDM வந்த பிறகு அந்த பிரச்சனை இல்லை . ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் KDM சேர்த்தால் போதும். பற்றவைக்க இதனை பயன் படுத்தலாம் .பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் KDM மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும் நகையில் இருக்கும் .
செய்கூலி சேதாரம்
தற்போது கூலி இல்லை ,சேதம் இல்லை என விளம்பரங்கள் வருகின்றன .ஆனால் கூலி இல்லாமல் சேதம் இல்லாமல் தரமான 91.6 kdm நகையை கொடுக்க முடியாது. உதாரணமாக கல் வைத்த மோதிரம் ஒரு நகை பட்டறையில் எப்படி தயாராகிறது என்று பார்ப்போம்.
1. முதலில் சுத்தமான 24 கேரட் தங்கம், செம்பு மற்றும் வெள்ளி சேர்த்து , 22 கேரட் ஆபரண தங்கமாக மாற்ற படுகிறது
2. மோதிரம் முதலில் மோல்டிங் செய்யப்படுகிறது . மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்கப்படுகிறது.
3. பின்னர் அளவு தட்டி, ராவி சுத்தம் செய்யப்படுகிறது . அளவு தட்டும் போதும் , ராவும் போதும் சேதம் ஏற்படும் .
4. அடுத்து மோதிரம் பம்பிங் முறையில் மெருகு ஏற்றப்படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும்.
5. பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க, செதுக்க , நகை செய்பவரால் கூலி ,மற்றும் சேதம் கொடுக்க படுகிறது.
6. பின்னர் நீர் மெருகு போடப்பட்டு மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.
இப்படி ஒரு மோதிரம் செய்ய இவ்வளவு வேலை இருக்கும் போது கூலி இல்லாமல் ,சேதம் இல்லாமல் தரமான 916 KDM நகை எப்படி கொடுக்க முடியும் . அப்படியே கொடுத்தாலும் வேறுவகையில் பிடுங்கி விடுவார்கள்.
ஒரு நகை செய்ய நகையின் தன்மைக்கு ஏற்ப மூன்று முதல் எட்டு சதவீதம் வரை நகை செய்பவருக்கு கொடுக்கப்படுகிறது . இடைத்தரகர் மூலம் ( இடைத்தரகருக்கு கமிசன் போக ) மொத்த வியாபாரிக்கு செல்கிறது . பிறகு (மொத்த வியாபாரிக்கு கமிசன் போக ) நகை கடைக்கு செல்கிறது . மக்கள் நகை வாங்க செல்லும் போது இடைதரகர் கமிசன் ,மொத்த வியாபாரி கமிசன் எல்லாம் மக்கள் தலையில் சுமத்தப்படுகிறது.
நகை வாங்கும் போது
91.6 KDM மட்டும் வாங்கணும்
ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ஆயிரம் ரூபாய் எனில் , கூலி சேதம் வேறு எல்லாம் சேர்த்து 15 முதல் 20 சதவீதம் அதிகம் கொடுத்து வாங்கினால் அதுவே அதிகம்.
இப்போது சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் மக்கள் நேரடியாக தங்கள் நகைகளை வெறும் 25 ரூபாய் செலவில் தர சோதனை செய்து கொள்ளலாம்.
மிகவும் தரம் உள்ள நகைக்கு மட்டுமே ஹால் மார்க் போடுவார்கள் . ஹால் மார்க் என்பது தரத்திற்கான சான்று . ஹால் மார்க் முத்திரை இடும் நிறுவனம் துவங்க லட்ச கணக்கில் செலவுஆகும். ஹால் மார்க் என்றால் 22CT மட்டும் அல்ல 14CT ஹால் மார்க் 18CT ஹால் மார்க் அப்படி உள்ளது. மிக மிக சிறிய அளவில் தரம் குறைந்தாலும் ஹால் மார்க் முத்திரை கிடைக்காது.
22CTகீழ் உள்ள நகை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் .
ஆனால்14CT,18CT ஹால் மார்க் முத்திரை பெற்று அதற்குரிய விலை வாங்கி கொண்டு விற்பனை செய்யலாம்.
சிறு குறிப்பு:
KDM என்று சொல்வது முதலில் தவறு. CADMIUMஎன்பதை கேடியம் என சொல்லி KDM என்று ஆகி விட்டது.
No comments:
Post a Comment