Simple Ways to Transfer Files from PC to iPhone: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Thursday, 26 January 2017

Simple Ways to Transfer Files from PC to iPhone:

கணினியில் இருந்து ஐபோனிற்கு படங்களை டிரான்ஸ்ஃபெர் செய்வது எப்படி? 
கணினியில் இருக்கும் புகைப்படங்களை ஐபோனிற்கு டிரான்ஸ்ஃபெர் செய்வது என்பது சற்றே கடினமானதாகும். ஐபோன் சார்ந்த பணிகள் எப்போதும் கடினமானதாகவோ அல்லது சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐபோனில் படங்களை பரிமாற்றம் செய்வது கடினமானது ஆகும். இதே நிலை ஐபேட் மற்றும் ஐபாட்களிலும் நிலவுகிறது.
விண்டோஸ் கணினி அல்லது மேக் கணினியில் இருந்து ஐபோனிற்கு படங்களை பரிமாற்றம் செய்ய முடியும். இதை செயல்படுத்த உங்களது கணினியில் ஐடியூன்ஸ் (iTunes) இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கு கணினியில் இருந்து ஐபோனிற்கு படங்களை பரிமாற்றம் செய்வது எப்படி என பார்ப்போம்.

ஐகிளவுட் (iCloud):

ஐகிளவுட் சேவையில் கணக்கினை (அக்கவுண்ட்) துவங்க வேண்டும். கூகுள் டிரைவ் மற்றும் ஒன்டிரைவ் போன்று இல்லாமல் ஐகிளவுட் சேவையில் 5ஜிபி மெமரி மட்டுமே வழங்கப்படும். அதிக மெமரி வேண்டும் என்போருக்கு இந்த சேவை அதிகளவு பயன் தராது என்றால் மற்ற சேவைகளை பயன்படுத்தலாம்.

கூகுள் டிரைவ்:

முதலில் கணினியில் இருக்கும் படங்களை கூகுள் டிரைவில் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். பின் ஐபோனில் கூகுள் டிரைவ் இன்ஸ்டால் செய்து படங்களை தரவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.

கூகுள் போட்டோஸ்:

படங்களை ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயக்க கூகுள் போட்டோஸ் (Photos) நல்ல சேவையாக இருக்கின்றது. கூகுள் போட்டோஸ் சேவையினை பல்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பதால் படங்களை டிரான்ஸ்ஃபெர் செய்வது எளிமையாக முடிந்து விடும்.

ஐடியூன்ஸ்:

வழக்கமான முறைகளை பின்பற்றி படங்களை கணினியில் இருந்து ஐடியூன்ஸ்-ல் அனுப்பலாம், எனினும் இதே பணியை செய்ய சின்க் (Sync) வசதியும் வழங்கப்படுகிறது. 

காப்பி டிரான்ஸ்ஃபெர் (Copy Transfer):

கணினியில் இருக்கும் படங்களை ஐபோனிற்கு பரிமாற்றம் செய்ய உதவும் மூன்றாம் தரப்பு செயலியாக காப்பி டிரான்ஸ்ஃபெர் (Copy Transfer) இருக்கிறது. இந்த செயலி பழைய மற்றும் புதிய ஐஓஎஸ் இயங்குதளங்களிலும் வேலை செய்கிறது. இதனால் படங்களை பரிமாற்றம் செய்வது எளிமையாகி விடுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad