
முகப்பொலிவுக்கு:
*பயத்தம் பருப்பு மாவுடன் தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து முகத்தில் பூசிவர, முகம் பொலிவு பெறும்.
*பழுத்த வாழைப் பழத்தை பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சருமம் மிருதுவாகும்.
*வெளியே
சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், பாலைக் கொண்டு முகத்தைத் துடைத்தால்,
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, சரும் பொலிவோடும் இருக்கும்.
*இரண்டு டீஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு டீஸ்பூன் பயித்தம் மாவைக் கலந்து முகப்பருத் தழும்புகளின் மீது பூசிவர, மறையும்.
*தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், நச்சுக்கள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.
*கை,
கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், அந்த இடத்தில்
எலுமிச்சம்பழச் சாற்றைத் தேய்த்து, சோப்பு போட்டுக் குளித்துவந்தால்,
கறுப்பு நிறம் போய்விடும். தோல் வறண்டு, சுருக்கம் இருந்தால், ஆலிவ்
ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊறவைத்து, சோப்பு போட்டுக் குளிக்க வேண்டும்.
நகத்தைப் பராமரிக்க:
*பால், பேரீச்சம் பழம் உள்ளிட்டவை நகங்கள் பலமடைய உதவும். பால், பேரீச்சம் பழத்தை தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டும்.
*பாதாம் எண்ணெயை நகத்தில் தடவிவர, நகங்களுக்குக் கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
கூந்தல் பராமரிப்பு:
நெல்லிக்காயை வெயிலில் காயவைத்துப் பொடிசெய்து,
தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி, தலைக்குத் தடவிவர முடி செழித்து
வளரும். முடி உதிர்தல், இளநரைக் கட்டுப்படும்.
No comments:
Post a Comment