2016 Ayudha Puja, Shastra Puja | Time during Navratri for 10.10.2016: - ALL TIPS FOR PEOPLE

Home Top Ad

Post Top Ad

Sunday, 9 October 2016

2016 Ayudha Puja, Shastra Puja | Time during Navratri for 10.10.2016:

ஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை- விஜயதசமி- சாமி கும்பிட நல்ல நேரங்கள்
AUDA நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.
இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த பூஜைகள் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரங்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். அதற்கேற்ப நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆயுதபூஜைக்கு ஏற்ற நேரம் இந்த வருடம் புரட்டாசி இருபத்து நான்காம் தேதி 10-10-2016 திங்கள் கிழமை அன்று ஆயுத பூஜை -சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம் பகல் 12-00 மணி முதல் 02-00 மணிக்குள் மற்றும் மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை பூஜை செய்வதற்கு சிறந்த நேரமாகும். இன்றைய தினம் தங்கள் தொழில் சம்பந்தமான ஒரு புதிய புத்தகம் வாங்கி பூஜை செய்வது சிறப்பு இதனால் சரஸ்வதி கடாட்சம் என்றென்றும் நிலைத்து நிற்கும். விஜயதசமி பூஜை ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால் அந்த வருடம் முழுவதும் தொழில் நிலை சிறப்படைந்து நன்றாக செல்வச் செழிப்பு உண்டாகும். தசமி திதியும் திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷம் இந்த வருடம் அந்த சிறப்பு நிகழ்கிறது. ஏதேனும் ஒரு புதிய செயலை இன்று துவக்குவது சிறப்பு. நல்ல நேரம் இந்த நாளில் நாம் துவங்கும் செயல் மிகவும் எதிர்காலத்தில் விருத்தியாகும். விஜய தசமி அன்று மறு பூஜை செய்வதற்கு சிறந்த நேரம் காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரையிலும் பகல் 12-00 மணி முதல் 01-00 வரையிலும் செய்வது நன்மை விளையும்.

No comments:

Post a Comment

Post Top Ad