வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?
நிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப்பாகிவிட்டதா? அப்புறம் அந்த கருமையை மறைக்கிறதுக்காகவே லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போக முடியாதுன்னு கவலைப்படுறீங்களா கேர்ள்ஸ்?
இது உங்களுக்கான ஈஸி டிப்ஸ் தான். செய்வது மிக சுலபம். அதன் பலனோ அட்டகாசம்.
வீட்டிலேயே இயற்கையாக பக்க விளைவு இல்லாத லிப்ஸ்டிக் தயாரிக்கலாம். இதையே லிப்ஸ்டிக் என்று இல்லாமல் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்கு முக்கியமான தேவை ஒரே ஒரு பீட்ரூட் தான்.
பீட்ரூட் இயற்கையிலேயே நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட்டை கொண்டுள்ளது. புற ஊதாக்கதிரின் தாக்கத்திலிருந்து உதட்டினை பாதுகாக்கிறது. இந்த பீட்ரூட் லிப்ஸ்டிக் தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது, கருமை மறைந்து, நாளடைவில் உங்கள் உதடுகளும் பிங்க் நிறத்தில் ஆகும். ட்ரை பண்ணிப் பாருங்க.
தேவையானவை :
பீட்ரூட்-1
தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
தேன் மெழுகு – 4 ஸ்பூன்.
செய்முறை :
பீட்ரூட்டின் தோல் பகுதியை அகற்றி, துருவி அதன் சாறினை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மூடியுள்ள கன்டெயினரில் அந்த பீட்ரூட் சாறினை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த லிப்ஸ்டிக் நிறைய நாட்கள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் நல்ல சுத்தமான அளவு சிறிய கன்டெயினரை எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது பீட்ரூட் சாறுடன்,தேங்காய் எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றையும் போட்டு, நன்றாக ஒரு சிறிய ஸ்பூன்அல்லது டூத் பிக்கினால் கலக்குங்கள். பிறகு அதனை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஓரிரு நாட்களில் உறைந்து விடும். பின் தேவைப்படும்போது அதனை உங்கள் உதட்டில் போட்டுக் கொள்ளலாம். உதட்டில் காய்ந்தவுடன், உதடு சிவந்து மினுமினுப்பாக தெரியும். கடைகளில் வாங்கும் லிப்ஸ்டிகை விட அழகாய் உங்கள் உதடுகளை காண்பிக்கும்.
இது அற்புதமான ஸ்கின் டோனர். உதட்டில் கருமையை போக்கி, ஈரப்பதம் அளிக்கும். இதில் ப்ரிசர்வேட்டிவ் இல்லை. கெமிக்கல் இல்லை. உங்கள் உதடுகளுக்கு மிகவும் ஏற்றது. தினமும் உபயோகப்படுத்தினால், உங்கள் உதடும் அதே நிறத்தில் மாறி ,தோற்றத்தை அழகாக்கும்.
இதே போலவே இந்த பீட்ரூட், தேன்மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் அருமையான ஸ்க்ரப் தயார்.
இதனை வாரம் ஒரு முறை உதட்டில் ஸ்ரப் செய்தால், இறந்த செல்கள் அகன்று உடது மிகவும் மென்மையாகும்.
குறிப்பு:
பீட்ரூட் அடர்ந்த கலர் தருவது போல் லைட்டான சிவப்பு நிறம் தேவையெனில் நீங்கள் மாதுளம் பழச் சாறினை எடுத்தும் இதே போல் செய்யலாம். அது லைட் கலர் ஷேட்டில் அழகாக இருக்கும்.
இயற்கையானவை அனைத்துமே உங்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்யும். பாதுகாப்பானவைக் கூட. கடைகளில் வாங்கும் கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளைப் பதம் பார்க்கும். இந்த இயற்கையான லிப்ஸ்டிக் உங்கள் உதட்டிற்கு நிறத்த அளித்து உங்களை மிளிரச் செய்யும். செய்து, பயன் பெறுங்கள் தோழிகளே!
No comments:
Post a Comment