தான் நடத்திய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, மே மாதம் நடுப்பகுதியில் CBSE வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
www.cbse.nic.in என்ற இணையதளம் சென்று, மாணவர்கள் தங்களுக்கான முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மேலும், டெலிபோன் மூலமாகவும், SMS சேவை மூலமாகவும் முடிவுகளை பெறும் வகையில் CBSE ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்தாண்டு, 7.29 லட்சம் மாணவர்கள் பள்ளி அடிப்படையிலான CBSE தேர்வை எழுதினர். 5.96 லட்சம் பேர் external வாரியத் தேர்வுகளை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து கேந்திர வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, தனியார் பள்ளிகள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான பள்ளிகள் ஆகியவை CBSE இணைப்பு பள்ளிகளாக உள்ளன.
No comments:
Post a Comment